Saturday, May 22, 2021

அம்மா

 பெற்றெடுக்க கருவில் சுமந்தாய்

பெற்றெடுத்து நெஞ்சில் சுமக்கிறாய்

குழந்தை பசியால் உன் தூக்கத்தை கெடுத்தேன்

வளர்ந்து நோவால் உன் தூக்கத்தை  பறித்தேன்

நோவு என்று விழுந்தால்

பதறும் உன் நெஞ்சு

இரவு பகல் பாராமல்

 சேவை செய்ய துடிக்கும் உன் நெஞ்சு

தூக்கம் மறந்து உன் கண்கள் என்னை நோக்க

தூக்கத்தில் அசைந்தால் கூட உன் மனம் துடிக்க

நான் என்ன தவம் செய்தேன்

என் பசியாற பத்தியம் இருந்தாய்

 என் தாகம் தீர்க்க துடித்தாய்

 உன் வாழ்க்கை முழுவதும்

என் வாழ்க்கைக்காக அர்ப்பணித்தாய்

உன் ஆசை விற்று

என் ஆசைகள் செய்தாய்

உன் கனவுகளை இருளாகி

 என் கனவுக்கு ஒளி கொடுத்தாய்

எனக்கு சுவை கொடுக்க

உன் பசி துறந்தாய்

இத்தனை நீ எனக்காக செய்ய

நான் உனக்கு என்ன செய்யப் போகிறேன்

என் வாழ்க்கை முழுவதும் தந்தாலும் ஈடாகாது

என் உயிர் அம்மா.

2 comments:

அம்மா

 பெற்றெடுக்க கருவில் சுமந்தாய் பெற்றெடுத்து நெஞ்சில் சுமக்கிறாய் குழந்தை பசியால் உன் தூக்கத்தை கெடுத்தேன் வளர்ந்து நோவால் உன் தூக்கத்தை  பறி...